--- --:--:-- --

இராமநாதபுரம் நகரில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன..!

8

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முதல் கீழக்கரை செல்லும் வழியில் மேம்பால பணி நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இன்று முதல் கீழக்கரை இரயில் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படியும், துணைகாவல் கண்காணிப்பாளர் அறிவுத்தலின்படி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 

வழிதடங்கள்:- அரண்மனை மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாரதிநகர் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் ( நகர் மற்றும் புறநகர் பேருந்துகள்) பழைய பேருந்து நிலையம், குமரையா கோவில் வழியாக செல்லும், இராமேஸ்வரத்தில் இருந்துவரும் புறநகர் பேருந்துகள் ECR வழியாக பேராவூர் கேணிக்கரை, புதிய பேருந்து நிலையம் வந்தடையும், நகர் பேருந்துகள் ‘D’ பிளாக் வழியாக அம்மா பூங்கா ஓம்சக்திநகர், கேணிக்கரை, புதிய பேருந்து நிலையம் வந்தடையும், இரு சக்கர வாகனங்கள், மற்றும் கார், ஆட்டோ, LMV Vehicles,குமரையாகோவில் வழியாக சின்னக் கடை ,வழிவிடுமுருகன்கோவில் ,புதியபேருந்து நிலையம் வழியாக செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon