“தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை.. அடுத்த 20 நாட்கள் சவாலானது!!” தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை எனவும், அடுத்த 20 நாட்களும் சவாலானதாக இருக்கும் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுப்பது போல் உஷார்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு மேலாகவே பதிவாகி பீதியை கிளப்பியது. இந்த பாதிப்பு கடந்த ஒரு மாதமாக படிப்படியாக கீழிறங்கி வருகிறது. சென்னையிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 488 ஆக இருந்தாலும், உயிரிழப்பு 11 ஆயிரத்தை கடந்த நிலையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மக்கள் சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்கி விட்டனர் என்றே கூறலாம். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்பதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த வேளையில், கொரோனா பரவலின் 2-வது அலை வீசலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டாலும், மக்கள் இப்படி பயமின்றி அலட்சியம் காட்டத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் தான் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உஷார்படுத்துவது போல, ஒரு எச்சரிக்கையை விடுத்து கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்திஇன்னமும் ல் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் இது 5% ஆகவும் உள்ளது. அடுத்து வரும் 20 நாட்களும் சவாலானதாகவே இருக்கும்.
மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை பெருவாரியாகக் குறைக்கலாம். தொற்று குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.இந்த வேளையில் தலைமைச் செயலாளர் சண்முகம், கொரோனா தொடர்பாக இப்படி ஒரு தகவலைத் கூறி எச்சரிக்கை விடுத்திருப்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





