--- --:--:-- --

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த ஊர்..!

10

திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த ஊர் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாணியம்பாடியை சேர்ந்த பவானி என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவர் தான் காதலித்த ஜீவானந்தம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

ஜீவானந்தத்தின் ஊரான கீழ்பள்ளிபட்டு கிராம வழக்கப்படி காதல் திருமணம் செய்தால் மாப்பிள்ளை வீட்டாருக்கு 8,000 ரூபாயும், பெண் வீட்டாருக்கு ஐந்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப் படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

 

ஆனால் ஜீவானந்தத்திற்கு நாற்பதாயிரம் ரூபாயும், பெண் வீட்டாருக்கு பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜீவானந்தம் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்த நிலையில் பாக்கி பணத்தை கொடுக்கும் வரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக பஞ்சாயத்தில் கூறியிருக்கிறார்கள்.

 

இதுகுறித்து ஜீவானந்தம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து இருவரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon