தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும்..!
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. சென்னையிலும் விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை கொட்டியது.
அதன்பின்னர் மழைப்பொழிவு இல்லை. இந்நிலையில் சென்னையில் சைதாப்பேட்டை கிண்டி, வடபழனி, கோயம்பேடு, நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பொழிந்தது. இதனிடையே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக கன மழை எதிர்பார்க்கலாம் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.






