--- --:--:-- --

ரயிலின் கழிவறையில் சிக்கிய பயணி நீண்ட நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார்..!

6

சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்பட்டு சென்ற ரயிலில் கழிவறை கதவு திறக்காததால் சிக்கிக்கொண்ட பெண் பயணி நீண்ட நேர முயற்சிக்குப் பின் வெளியேற்றப்பட்டார்.

 

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு நெல்லை சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த பெண்ணொருவர் கழிவறைக்கு சென்று நிலையில் தாழிடப்பட்ட கதவில் ஏற்பட்ட பழுதால் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டார்.

 

விழுப்புரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் ரயில்வே பணியாளர்கள் நீண்ட நேரம் போராடி கதவைத்திறந்து வெளியே வந்தார். இதனால் விழுப்புரத்தில் இருந்து ரயில் புறப்பட காலதாமதம் நேரிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon