--- --:--:-- --

முன்னாள் நண்பர் தன் புகைப்படங்களை தனது அனுமதியின்றி இணையத்தில் வெளியிடுவதாக அமலாபால் புகார்..!

5

முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடை என்ற படத்தில் நடித்து அமலாபால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

இந்நிலையில் நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். பாடகர் ஒருவடன் அமலா பால் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சிலமணி நேரத்தில் நீக்கிவிட்டார்.

 

இந்த நிலையில் நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது முன்னாள் நண்பர் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாக அவதூறு பரப்புவதாக கூறியுள்ளார்.

 

தன்னுடைய இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் அவர் வெளியிட்டு வந்ததாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாக வெளியிடப்பட்டுள்ள தகவல் தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon