தக்காளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..! தக்காளியை அள்ளிச்சென்ற பொது மக்கள்..!
செங்கல்பட்டு அருகே தக்காளி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சாலையில் கொட்டி கிடந்த தக்காளியை அந்த பகுதி மக்கள் மூட்டை மூட்டையாக அள்ளிச் சென்றுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை ஏற்றி செங்கல்பட்டு அங்காடியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி பாலூர் பகுதியில் திடீரென கவிழ்ந்தது.
உயிர் சேதம் இல்லாத நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த தக்காளியை அந்த பகுதி மக்கள் தண்ணீர் குடம், அன்னக் கூடை மற்றும் சாக்குப் பைகளில் அள்ளிச் சென்றுள்ளனர்.
சிலர் காய்கறி கடையில் வாங்கி வருவது போல பார்த்து பார்த்து தக்காளிகளை எடுத்து சென்றனர். ஒரு சிலரோ லாரியில் இருந்த டீசலை பிடித்துள்ளனர்.






