--- --:--:-- --

கணவனை பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்த மனைவி..!

9

நாகர்கோவிலில் கணவன் நடத்திவரும் பழ கடைக்குள் நுழைந்த மனைவி பாட்டிலால் அவரது மண்டையை அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வேப்பமூடு பகுதியை சேர்ந்த அன்பு என்ற அந்த நபரும் அவரது மனைவி மோனிகாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

 

குடும்ப தகராறில் மோனிகாவின் சகோதரர்கள் மீது அன்பு போலீசில் புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திடீரென்று அடியாட்களுடன் கடைக்குள் புகுந்த மோனிகா அங்கிருந்த சர்பத் பாட்டில் ஒன்றை எடுத்து அவர் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

 

மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அன்பு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடியாட்களுடன் தலைமறைவான மோனிகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon