--- --:--:-- --

கொரோனா ஊரடங்கு : இந்த மாதம் எப்படி இருந்ததோ அப்படியே அடுத்த மாதமும் தொடரும்… மத்திய அரசு அறிவிப்பு

fg

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கை நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் என்ன மாதிரி தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்ததோ அதே மாதிரியே புதிய தளர்வுகள் ஏதுமின்றி அடுத்த மாதமும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நாடே ஸ்தம்பித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாட்டில் தற்போது ஓரளவுக்கு சகஜ நிலை திரும்பியிருந்தாலும், ரயில், விமானம், மாநிலங்கள் இடையே பேருந்து போக்குவரத்து போன்றவை இன்னும் முழுமையாக செயல்படவில்லை.

 

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இந்த மாதம் 30-ந் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு, அதாவது நவம்பர் 30_ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 30-ம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொதுமுடக்கத் தளர்வுகள் குறித்து செப்டம்பர் மாதத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் எந்த மாற்றமும் இன்றி நவம்பர் 30 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானங்களைத் தவிர மற்ற விமானங்களுக்கான தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon