--- --:--:-- --

பரப்புரை கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது காலணி வீச்சு..!

1

பீகாரில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவின் மகனும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டன. பீகாரில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பரப்புரை சூடுபிடித்து வருகிறது.

 

ஔரங்கா பாத் நகரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி சார்பாக பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ் மேடைக்கு வந்ததும் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கையில் அமர்கிறார்.

 

அப்போது முதல் காலனி வீசப்பட்ட நிலையில் அது பின்னால் போய்விழுகிறது. அடுத்த வீசப்பட்ட காலணி நேராக தேஜஸ் யாதவின் கைகளில் வந்து விழுந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon