--- --:--:-- --

திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் வரும் 28ஆம் தேதி ஆலோசனை..!

4

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அக்டோபர் 15-ஆம் தேதி முதல் டெல்லி, உத்திரப்பிரதேசம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

 

அவர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் வரும் 28ஆம் தேதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் திரையரங்கு உரிமையாளர்களும் முதலமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளனர். அதன் பின்னரே தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலும் திரையரங்குகளை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon