காஷ்மீரில் நடந்த வெவ்வேறு என்கவுண்டர்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு என்கவுண்டர்களில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு கூட்டுப் படையினர் சுட்டுக்கொன்றனர். சோபியா மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தபோது பயங்கரவாதிகள் 5 பேர் வீழ்ந்தனர்.
சோபியான் மாவட்டத்தில் மென்கரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததால் அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புல்வாமாவின் அக்ரிஹோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு இடங்களிலும் ஏராளமான ஆயுதங்கள் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.






