கண்ணாம்பூச்சி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி..!
நடிகை வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் கண்ணாம்பூச்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 50 பெண் பிரபலங்கள் மூலம் சமூக வலைதளங்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் சமீபகாலமாக கதாநாயகியை மையப்படுத்தி தயாராகும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது கண்ணாமூச்சி திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, நடிகை திரிஷா, சிம்ரன், சங்கீதா, சினேகா ஆகியோர் சமூக வலைதளங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.






