--- --:--:-- --

பள்ளி எதிரே ஒட்டப்பட்ட கவர்ச்சிபட போஸ்டர் கிழிப்பு..!

12

கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை இளைஞர் ஒருவர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழில் வெளிவந்த ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் குமார் இயக்கத்தில் இரு குத்து என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.

 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் வெளியானது. ஆபாச காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட டீஸராக அது அமைந்திருக்கிறது. ஆபாசமான டீசரை வெளியிட்டதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான பாரதிராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவை தேர்முட்டி பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரேயுள்ள சுவரில் இரு குத்து என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

 

இதே பகுதியில் நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் நபர் கடும் கோபமடைந்து அந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தான். பள்ளி எதிரில் உள்ள போஸ்டர்களை நகை கடை ஊழியர் ஒருவர் கிழித்தெறியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon