பிரபல சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு..!
சென்னையில் பிரபல சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம் ஐஏஎஸ் குடியிருப்பில் சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மற்றும் அவரது மகன் சந்தோஷ் வில்லியம்சன் வாடகைக்கு வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு சந்தோஷ் தூங்க சென்ற நிலையில் நேற்று மதியம் அவரது தாய் சாந்தி வில்லியம்ஸ் என்று எழுப்பிய போது அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.






