அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள், பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டது.

 

இருப்பினும் பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார். அதில் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் நேரடி வகுப்புகள் அல்லது ஆன்லைன் வகுப்புகள் என்பதை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பள்ளியில் அனைத்து வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகைப் பதிவில் கண்டிப்பு கூடாது நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய பதிவு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இடையே தனிமனித இடைவெளி இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply