“இதுவரை எல்லாம் நன்மையே!” “எது நடக்கவுள்ளதே அதுவும் நல்லதாகவே நடக்கும்!!” மவுனம் கலைத்த ஓபிஎஸ்!!

டந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் – ஓபிஎஸ் இடையே பெரும் மோதலாகி கட்சிக்குள் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், பொது வெளியில் இருவருமே எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில், கட்சி விவகாரம் குறித்து ஓபிஎஸ் முதல் தடவையாக டுவிட்டரில் நடக்கப் போவதும் நல்லதே என சூசகமாக பதிவிட்டுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.

 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் பெரும் பஞ்சாயத்தே நடந்து வருகிறது. எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் இருந்தாலும், ஓபிஎஸ் இந்த முறை பணிந்தோ, விட்டுக் கொடுத்தோ போவதில்லை என்பதில் பிடிவாதம் காட்டுகிறார். ஆட்சிக்கு எடப்பாடி என்றால் கட்சிக்கு தம்மை ஒற்றை அதிகாரம் படைத்த பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உறுதியாகவே உள்ளதாக தெரிகிறது.

 

நாளை மறுதினம் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ள பரபரப்பான சூழலில், பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் முகாமிட்டு ஆதரவாளர்களுடன் கடந்த 3 தினங்களாக ஓபிஎஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னைக்கு திரும்பும் முடிவிலும் அவர் இல்லை என்றே கூறப்படுவதால் 7-ந் தேதி என்ன நடக்குமோ? என்ற எதிர்பார்ப்பும், பீதியும், பதற்றமும். அதிமுகவினரிடையே நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் கட்சி சார்பில் அமைச்சர்கள் சிலர் ஆளாளுக்கு கருத்து கூறினாலும், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே பெரும் மவுனம் சாதித்து வந்தனர்.

 

இந்த நிலையில், ஓபிஎஸ் தனது மவுனத்தை கலைத்து தனது கருத்தை சூசகமாக வெளியிட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று ஓபிஎஸ் தனது டுவிட்டர் பதிவில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என பதிவிட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் தனது தரப்புக்கு நன்மையே நடக்கும் என்று உறுதி பட தெரிவித்துள்ளதால் தனது முடிவில் அவர் பின் வாங்குவதாக இல்லை என்பதையே உணர்த்துவதாக தெரிகிறது. எனவே அதிமுகவில் அடுத்து என்ன? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.


Leave a Reply