கனிமொழியின் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது – டென்ஷன் ஆன அமைச்சர் செங்கோட்டையன்
தி.மு.க எம்.பி கனிமொழி, ‘த.வெ.க ஆட்சி நீடித்தால், தமிழகம் இருண்ட காலத்திற்கு போய்விடும்’ என்று தெரிவித்து இருந்தார். இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த அவர், “கனிமொழியின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. டி.வி-யில் வரும் செய்திகளை வைத்து கொண்டு பேசக்கூடாது. உங்க அண்ணன் எப்படி பேசுனாருனு கேட்க வேண்டிதானே.” என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




