தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 62 பேர் உயிரிழப்பு.. சென்னையில் 1367 பேருக்கு பாதிப்பு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த இரு மாதங்களாக ஒரு சீரான அளவில் பதிவாகி வருகிறது . தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று 5395 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று வரை மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 45 ஒயிரத்து 881 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

தமிழகத்தில் நேற்றைய உயிரிழப்பு 6ம ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 62 பேர் ஆவர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9846 ஆக உயர்ந்துள்ளது.

 

புதிய உச்சம்

 

சென்னையில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக 1367 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 468, செங்கல்பட்டு 343, சேலம் 337, தஞ்சையில் 251 என மாவட்டங்களில் இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply