நாடு முழுவதும் இன்று நடைபெறும் யு‌பி‌எஸ்‌சி தேர்வுகள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ஐ‌ஏ‌எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி இடங்களுக்காக யுபிஎஸ்சி நடத்தும் முதல் நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகின்றன. ஐ‌ஏ‌எஸ், ஐ‌பி‌எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்காக யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை தேர்வுக்காக நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் இன்று 2569 மையங்களில் நடைபெறுகின்றன. காலை மாலை என இருவேளைகளிலும் தேர்வு நடைபெறுகிறது. காலை 9:30 மணிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு தேர்வுகள் தொடங்குகின்றன.

 

கொரோனா காரணமாக தேர்வில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.யுபிஎஸ்சி தேர்வையொட்டி சென்னையில் காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply