நாகையில் மது விற்பனை செய்து வரும் மூதாட்டி..!
நாகை மாவட்டம் நாகூரில் காய்கறி கடையில் வைத்து மது விற்பனை செய்த மூதாட்டி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் காய்கறி கடை ஒன்றில் புதுச்சேரி மது பானங்களை சட்டவிரோதமாக விற்ற மூதாட்டி ஒருவர் விற்பனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து விசாரித்த போலீசார் வண்டி பேட்டையை சேர்ந்த மூதாட்டி மயில் அம்மாள் மற்றும் காய்கறி கடை உரிமையாளர் ஆகியோரை கைது செய்தனர்.






