அதிக வருவாய் ஈட்டியுள்ள கூகுள் நிறுவனம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


லகம் முழுவதும் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட ஏராளமான செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள போதும் கடந்த மூன்று மாதங்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் செல்போன் செயலிகளின் பதிவிறக்கம் மற்றும் பயன்பாட்டின் மூலம் 2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக அமெரிக்காவின் முன்னணி தரவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் செயலிகள் மூலம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயும், கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோர் செயலிகள் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுளைவிட ஆப்பிள் நிறுவனம் இரு மடங்கு அதிக வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply