பாலியல் புகாரை மறுக்கும் நடிகை பாயல் கோஷ்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நடிகை குறிப்பிடும் காலகட்டத்தில் தான் இந்தியாவிலேயே இல்லை என விளக்கமளித்துள்ளார். பாலிவுட் திரைப்பட இயக்குனரான அனுராக் காஷ்யப் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என பாயல் கோஷ் கூறினார்.

 

பாலிவுட் திரைப்பட இயக்குனரான அனுராக் காஷ்யப் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தாக நடிகை பாயல் கோஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து மும்பை காவல் துறையிடம் புகார் அளித்த அவர் கஷ்யப்பை கைது செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

 

இதனை ஏற்று 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக காஷ்யப்பிடம் வழக்கறிஞர் பிரியங்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறும் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஷ்யப் படப்பிடிப்பு நடத்துவதற்காக அந்த மாதம் இலங்கையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே நடிகை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கஷ்யப் வலியுறுத்தியதாகவும் வழக்கறிஞர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply