தமிழகத்தில் இன்று 5595 பேருக்கு கொரோனா பாதிப்பு… உயிரிழந்தோர் 67 பேர்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


மிழகத்தில் இன்று ஒரே நாளில் 5595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 5595 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆகும்.

 

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5603 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 ஆக உயர்ந்துள்ளது.

 

இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 67 பேர் ஆவர். சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply