--- --:--:-- --

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

6

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

எஞ்சிய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon