போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல்பிரீத் சிங்கிற்கும் தொடர்பா..?
சுஷாந்த் சிங் மரண வழக்குடன் தொடர்புடைய போதைப்பொருள் புகாரில் தமிழ் திரைப்பட நடிகை ராகுல் பிரீத் சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்த புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது போதை பொருள் பயன்படுத்திய பாலிவுட் பிரபலங்களின் பெயரை கூறியதாக தகவல்கள் வெளியாகின.
அதை வைத்து பட்டியல் தயாரித்த என்சிபி அவர்களிடம் விரைவில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டியலில் நடிகைகள் சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் நடிகை ராகுல் பிரீத் சிங் தமிழில் தீரன், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.






