--- --:--:-- --

திருடிய இடத்திற்கே மீண்டும் வந்த திருடர்கள் சிக்கி கொண்டனர்..!

8

இரவில் செல்போன் திருடியவர்கள் மறுநாள் பகலில் அதே இடத்திற்கு வந்து தானாக சிக்கிய சம்பவம் சென்னை பல்லாவரத்தில் நிகழ்ந்துள்ளது. பல்லாவரத்தை அடுத்த கவுல் பஜார் பகுதியில் இயங்கிவரும் அட்டை கம்பெனிக்குள் இரவுநேரத்தில் புகுந்த 4 செல்போன்களை திருடி சென்றுவிட்டனர்.

 

அந்த கம்பெனி உரிமையாளர் பழனி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களைத் தேடி வந்தனர். அதேசமயம் அந்த திருடர்களும் அதே கம்பெனிக்கு வெளியே மீண்டும் வந்து நோட்டமிட்டு உள்ளனர்.

 

சிசிடிவி காட்சியில் பார்த்த அதே உருவம் தெரிந்ததால் கம்பெனி உரிமையாளர் உடனே தகவல் தெரிவிக்க விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு பேரையும் மடக்கி பிடித்துள்ளனர்.

 

அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்த கையோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon