--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்..!

12

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோர மற்றும் லட்சத் தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை கடலலைகள் 2.5 மீட்டரில் இருந்து 3 மீட்டர் உயரம் வரை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon