--- --:--:-- --

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்..!

3

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அவருக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் விழிப்பு நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

பிஸியோதெரபி சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon