--- --:--:-- --

பல்கலைக்கழகங்களின் கல்லூரி இறுதியாண்டு தேர்வு ரத்தாகுமா?

1

பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்தப்படும் என யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையை தொடங்கிய நிலையில் இறுதி தேர்வு நடத்தா விட்டால் மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் அமைப்பது போன்றவற்றில் சிக்கல் ஏற்படும் என யு‌ஜி‌சி தரப்பில் வாதிடப்பட்டது.

 

மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இறுதி தேர்வு இல்லாமல் ஐ‌ஐ‌டி பட்டம் வழங்க முடியும் என்றால் மற்ற கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் ஏன் அவ்வாறு அனுமதிக்க கூடாது என கேள்விகள் எழுப்பினர். மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை நடத்தும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon