--- --:--:-- --

மத்திய அமைச்சருக்கு விஜயபாஸ்கர் எழுதிய கடிதம் குறித்து ஸ்டாலின் விமர்சனம்..!

5

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை கைவிட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு சி விஜயபாஸ்கர் எழுதியிருக்கும் கடிதத்தில் கொரொனா தொற்று அபாயம் நிறைந்த இந்த சூழலில் நீட் தேர்வை தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு இந்த ஆண்டு தவிர்ப்பதற்காக தேவைப்பட்டால் அவசரச் சட்டத்தைக் கூட மத்திய அரசு ஏற்றலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

 

நடப்பு 2020 – 2021 ஆம் ஆண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள அனுமதிக்கவும் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை மதிக்காத மத்திய அரசு அமைச்சரின் கடிதத்தையா மதிக்கப் போகிறதா என திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேஸ்புக் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். நீட் தேர்வை நடப்பு ஆண்டு கைவிட வேண்டும் என்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தை விமர்சித்து மு க ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

நீத் தேர்வை ஒத்தி வைக்க கோரி 7 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றம் செல்வது போல தமிழக அரசும் செல்ல வேண்டும் என தான் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அமைச்சர் அதை செய்யாமல் கடிதம் எழுதியிருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon