அடுத்த மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்..!
மத்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கம் இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அடுத்த மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பொது முடக்கத்திற்கு பிறகு மத்திய அரசு அன்லாக் என்ற பெயரில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன் படி அன்லாக் 3 இம்மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி அன்லாக் 4 தளர்வுகளை மத்திய அரசு அமல்படுத்தும் என தெரிகிறது. அப்போது டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
எனினும் மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தொற்று நிலவரத்திற்கு ஏற்ப முடிவு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. மேலும் மதுபான கூடங்களை திறப்பதற்கும் அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.
அதே நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை திறப்பதற்கான தடை நீடிக்கும் என்றும் அரசியல், கலாச்சாரம், பொழுதுபோக்கு மதரீதியான கூட்டங்களுக்கு தடை தொடரும் என தெரிகிறது.






