--- --:--:-- --

பிரியாணி இல்லாததால் ஊரடங்கின் போது கடையின் முன்பு ரகளை..!

9

கரூரில் பிரியாணி கிடைக்காத ஆதங்கத்தில் பூட்டியிருந்த கடையில் கல்லெறிந்த சகோதரர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். கரூர்- திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் கடந்த சனிக்கிழமை பிரியாணி கேட்டு வந்த சகோதரர்கள் இரண்டு பேர் இல்லை எனக் கூறிய ஊழியருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்போது கடை உரிமையாளர் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் பிரியாணியை நினைத்துக் கொண்டிருந்தவர்கள் தீராத ஆதங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை சாதகமாக்கி பூட்டியிருந்த பிரியாணி கடையின் ஷட்டரை யும் சிசிடிவி கேமராவையும் கல் எரிந்து தாக்கியுள்ளனர்.

 

கடை முன்பு இருந்த டேபிள்களையும் தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட கார்த்திகேயன் மற்றும் அவரது சகோதரன் யுவராஜ் கைது செய்த போலீசார் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon