--- --:--:-- --

13 வயது சிறுவனை லத்தியால் சரமாரி தாக்கிய போலீஸ்.கட்டுப்பாட்டு அறைக்கு இட மாற்றம் செய்து கமிஷனர் உத்தரவு !!!

9.1

கோவை ஒண்டிப்புதூரை அடுத்துள்ள சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவரகள் மணிகண்டன், பிரதிக்‌ஷா தம்பதியினர். இவர்களது 13 வயது மகன் யுவன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.

 

இந்த சூழ்நிலையில் கோவை ஜெயேந்திர சரஸ்வதி சாலையில் ரோந்து பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த யுவனை காவலர் ஒருவர் நிறுத்தி விசாரித்துள்ளார் .

விசாரித்தவர் பெற்றோரிடம் சொல்லி அறிவுரை கூறுவதற்கு பதில் லத்தியால் சரமாரியாக கை கால்களில் அடித்துள்ளார்.இதில் கை மற்றும் கால்களில் யுவனுக்கு லத்தியால் அடித்ததில் ரத்த காய தழும்புகள் ஏற்பட்டு வீங்கியுள்ளன.

 

சிறுவன் என்று கூட பாராமல் அடித்த காவலர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,சிறுவர்களை அடிப்பதை காவலர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என யுவனின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை லத்தியால் தாக்கிய போலீஸ் துர்காராஜ் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon