--- --:--:-- --

தனது ஷுவை கடித்த நாயை கடித்து வைத்த குட்டி பையன்..!

2

குழந்தைகள் என்றாலே குறும்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படி அவர்கள் செய்யும் குறும்புத்தனங்கள் எப்போதும் இணையத்தை கலக்கும். அந்த வகையில் தரையில் அமர்ந்திருக்கும் குட்டி பையனின் காலில் அணிந்திருந்த ஷுவை நாய்க்குட்டி ஒன்று கடித்து இழுக்க அழுதபடியே சிறுவன் அதனை விரட்டுகிறான்.

ஆனால் அதனை விட மறுத்த அந்த நாய்க்குட்டி பிடிவாதம் காட்ட கோபமடைந்த அந்த குட்டிப் பையன் நான் நாயை இறுகப் பிடித்து கடித்து வைத்துவிடுகிறான். அவ்வளவுதான் நாய் ஷுவை விட்டுவிட்டு பதறியடித்து ஓடுகிறது. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட இந்த குட்டி பையனின் சுட்டித்தனமான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon