--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..!

3

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என தெரிகிறது. தேவைப்படும் நிதி உதவிகள் குறித்தும் இந்த ஆலோசனையின் போது பிரதமரிடம் கேட்க வாய்ப்புள்ளது.

 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசிக்க உள்ளார். இதன்பின் முக்கிய முடிவுகள் எதேனும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon