--- --:--:-- --

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் பால்துரை கொரொனாவால் உயிரிழப்பு..!

4

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 56. சாத்தான்குளத்தில் சேர்ந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பெண்ணிஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர்.

 

இதனையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால் துறை உள்ளிட்ட 5 பேர் கடந்த மாதம் எட்டாம் தேதி கைதாகினர். இதில் கைது செய்யப்பட்ட பால்துரை அன்றைய தினமே உடல்நலக் குறைவால் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜூலை 24ஆம் தேதி பால் துரைக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பால்துரை. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்துள்ளார். தொடர் சிகிச்சையில் இருந்ததால் சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக பால்துரையிடம் இதுவரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பால் துறைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அவரது மனைவி மங்கையர் திலகம் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon