தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் :5864 பேருக்கு தொற்று பாதிப்பு …!! உயிரிழந்தோர் 110 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மட்டும் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் திடீரென உயர்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்தை ஒட்டியே பதிவாகி வருகிறது. நேற்று 5175 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 5864 ஆக பதிவாகியுள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2, 79,504 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆகும். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,571ஆக உயர்ந்து உள்ளது.சென்னையில் இன்று மட்டும் 1,091 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




