--- --:--:-- --

சுஷாந்த் சிங் வழக்கை சி‌பி‌ஐ க்கு மாற்ற அனுமதி அளித்துள்ள மத்திய அரசு…!

2.1

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற பீகார் அரசின் பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேரில் ஆஜராகி பீகார் அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினார். இதனிடையே சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அவரது தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் மும்பையில் வழக்கை விசாரித்து வரும் ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி கொரோனாவின் பெயரில் தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டிருப்பதும் வழக்கின் ஆதாரங்களை அழிக்க தான் என்று வாதிட்டார்.

 

ஆகவே சுஷாந்த் சிங் கொலை குறித்து விசாரிக்குமாறு காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு மும்பை காவல் துறைக்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார். இதுபோன்ற சூழலில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையை பீகாரிலிருந்து மும்பைக்கு மாற்ற வேண்டிய அவரது தோழி ரியா சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon