ஆடு திருட வந்தவர்களுக்கு ஆடு மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த மோதல்..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆடு திருட வந்தவர்களுக்கு ஆடு மேய்ப்பவர் களுக்கும் இடையே நடந்த மோதலில் படுகாயமடைந்த ஆடு திருடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் அடுத்த கிடாரகொட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் திருட முயற்சித்தது.
அப்போது அங்கு காவலுக்கு இருந்த இப்ராஹிம் கணேசன் ஆகியோர் கொள்ளை கும்பலை தடுத்து நிறுத்து முயன்றது. இதனால் ஆத்திரமடைந்த ஆடு திருடர்கள் வைத்திருந்த அரிவாளால் இரண்டு பேரை சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு இப்ராகிம் மற்றும் கணேசன் கொடுத்த தகவலறிந்து வந்த ஊர்மக்கள் கொள்ளையர்களை தாக்கினர்.






