தலையில் ஒரு கிளாஸ் பாலை வைத்துக்கொண்டு நீச்சலடித்து அசத்திய பெண்..!
ஒலிம்பிக் சாம்பியன் கேட்டிலடக்கி ஒரு கிளாஸ் பாலை தலையில் வைத்து ஒரு துளி கூட சிந்தாமல் தண்ணீரில் நீச்சல் அடித்து அசத்தியுள்ளார். 15 உலக சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றவர் அமெரிக்க வீராங்கனை கேட்டிலடக்கி.
இவர் சாக்லேட் பால் நிறைந்த கிளாசை தலையில் வைத்து ஒரு துளிப் பால் கூட கீழே சிந்தாமல் நீச்சல் குளத்தில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நீச்சலடித்து சென்றார். இந்த வியக்க வைக்கும் வீடியோவை கேட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகியுள்ளது.






