மானாமதுரை அருகே பசு மாட்டை காப்பாற்ற முயன்றவர் பலி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பசு மாட்டை காப்பாற்ற முயன்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜகம்பீரம் ராசு மனைவி வேட்டைக்காள் (60) இவர் வீட்டில் பசு மாடு வளர்த்து வருகிறார். தினசரி மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு கொண்டு சென்று விட்டு வருவது வழக்கம். வழக்கம் போல இன்று பசு மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். வயலில் மாட்டை அருகில் உள்ள தனியார் இடத்தில் உள்ள கம்பி வேலியில் கட்டி வைத்து விட்டு வீட்டிற்கு வந்து விடுவார்.
மின்சாரம் தாக்கி பலி
இரவு அடித்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து கம்பி வேலியில் கிடந்துள்ளது. அதனை கவனியாமல் சென்ற பசு மாடு மின்சாரம் தாக்கியதில் துடித்துள்ளது அதனை பாா்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் வேட்டைக்காள் காப்பாற்ற முயன்ற போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடும் அவரும் பலியானார்கள்.
விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பசுமாட்டை காப்பாற்ற முயன்று முதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படத்தியுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame






