திருமணத்திற்கான நடைமுறை, கட்டுப்பாடு என்ன ?
நாளை முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகளில் திருமண விழாக்களுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரொனா கட்டுப்பாடுகள் குறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில் திருமண விழாக்களுக்கான நடைமுறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் ஆடி மாதம் முடிந்து வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கும் ஆவணியில் திருமண விழாக்கள் நடைபெறும் என்பதால் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதன்படி திருமண விழாக்களில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படும் என்றும் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்க பட்டால் மட்டுமே இ பாஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.






