--- --:--:-- --

மும்மொழிப் பாடத் திட்டம் – எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி கட்டாயம்

13

எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி கட்டாயம் என்றும் சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு வேற்று மொழியை விருப்பப்பாடமாக கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி பாடத்திட்டம் பலரின் எதிர்ப்புகளை மீறி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாய்மொழி அல்லது பிராந்திய மொழி கட்டாய மொழியாகவும் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் ஏற்கனவே இருந்து வரும் சூழலில் புதிதாக விருப்பம் மொழியை ஒரு பாடமாக மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்திய மொழிகள் என்ற தலைப்பில் மாணவர்கள் விளையாட்டு அல்லது செயல்முறை திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பிற நாட்டு மொழிகளிலும் பயிற்றுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon