தன்னுடைய செல்போன் எண்ணிலிருந்து தனக்கே வந்த அழைப்பு..!அதிர்ந்து போன சரத்குமார்..!
நடிகர் சரத்குமாரின் செல்போன் எண்ணுக்கு அவரது எண்ணிலிருந்து அழைப்பு வந்ததோடு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் சரத்குமாரின் செல்போன் எண்ணுக்கு அவருடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. தனது எண்ணில் இருந்து தனது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் அதிர்ந்துபோன சரத்குமார் அதில் பேசியுள்ளார்.
எதிர்முனையில் பேசிய நபர் கோவையை சேர்ந்த மின் பொறியாளர் அசோக் என தன்னை அறிமுகப் படுத்தியுள்ளார். சரத்குமாரின் செல்போன் எண்ணை ஒரு செயலின் மூலம் கவர்ந்து அதே எண்ணில் இருந்து அழைத்து பேசுவதாக கூறியுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பேசிய உரையாடல் பதிவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மோசடி நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.






