--- --:--:-- --

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா..!

7

பிரம்மாண்ட திரைப்படங்களின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் ஈ ,பாகுபலியின் இரண்டு பாகங்கள் உள்ளிட்ட பிரம்மிக்க வைக்கும் திரைப்படங்களை இயக்கிய ராஜமௌலி தற்போது ஜூனியர் என்டிஆர் ராம் சரண் நடிக்கும் ஆறு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 

படப்பிடிப்பு இன்றி வீட்டில் இருக்கும் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ராஜமௌலி மருத்துவர்களின் அறிவுரைப்படி அனைவரும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்குக் காத்திருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார். அதன்பிறகு பிளாஸ்மா தானம் அளிக்க தயார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon