EIA – 2020 குறித்து நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள வீடியோ..!
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 சுற்றுச்சூழலுக்கு சாதகமானதாக இல்லை என்றும் பொதுமக்கள் அதை எதிர்க்க வேண்டும் என்றும் திரைப்பட நடிகை ஆத்மிகா கூறியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தை நாயகியான இவர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது சுற்றுச்சூழலுக்கு சாதகமாக இல்லை எனவும் இது பொதுமக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார். எனவே இந்த வரைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மக்களிடம் தெரிவித்துள்ளார்.






