ஆந்திராவில் கொரோனா விஸ்வ௹பம் : ஒரே நாளில் 10,093 பேருக்கு பாதிப்பு..! கர்நாடகாவிலும் விறு விறு வேகம்!!
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இன்றைய பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது.
தென் இந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஆரம்பம் முதலே சற்று குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் திடீரென பாதிப்பு உயர்ந்து ஆந்திராவில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,390-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் கொரோனாவால் 65 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1213 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த வாரத்திற்கு முன்பு ஊரடங்கு உத்தரவு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு கூடிக் கொண்டே உள்ளது. இதனால் பெங்களூரு நகருக்குள் நுழைய இபாஸ் கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




