தேனி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணிகளுக்காக இயங்கி வருகிறது. இந்த தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் லைசால், ஆசிட் உள்ளிட்ட ரசாயன கலவைகளை மருத்துவமனை அருகே உள்ள குடோனில் வைப்பது வழக்கம்.

 

அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் ரசாயன புகை மூட்டமாக உள்ளது. இதில் அதிர்ச்சியை தரும் செய்து என்னவென்றால் அந்த குடோனுக்கு மேலாக தான் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதி உள்ளது.

 

தீ விபத்து காரணமாக ஏற்படும் புகை அந்த நோயாளிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், புகை உள்ளே செல்லாமல் இருக்க திரைச்சீலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நோயாளிகளுக்கு தேவையான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply