கர்ப்பிணியை அண்டாக்குள் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பரிதாப நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. பிஜெப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போரா என்ற இடத்தில் லட்சுமி என்ற கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் ஆற்றை கடக்க வேண்டியிருந்தது.
இதனால் கர்ப்பிணியை பெரிய அண்டாவில் உட்காரவைத்து மூங்கில்களால் கட்டி தூக்கி சென்றனர். இவ்வளவு அரும்பாடுபட்டு கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்களுக்கு பெரும் சோகம் அங்கு காத்திருந்தது. கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தை பிரசவத்திற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவர் வர தாமதமானதே குழந்தை இறக்கக் காரணம் என கர்ப்பிணியின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.